விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தியேட்டர் ஆர்டிஸ்ட்டாக இருந்து நடிகை ஆனவர் பூஜா தேவரியா. மயக்கம் என்ன படத்தில் தனுஷ் தோழியாக நடித்தார். அதன் பிறகு இறைவி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, மோ, படங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் எதிலும் அவர் ஹீரோயின் இல்லை. இரண்டாவது நாயகி, அல்லது இன்னொரு ஹீரோயினாக நடித்தார்.
தற்போது ராஜா ரங்குஸ்கி என்ற படத்தின் மூலம் சோலோ ஹீரோயின் ஆகியுள்ளார். மெட்ரோ படத்தில் நடித்த சிரீஷ் ஹீரோ. வாசன் புரொடக்ஷன் சார்பில் சக்தி வாசன், பர்மா டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். பர்மா, ஜாக்சன் துரை படங்களை இயக்கிய தரணிதரன் இயக்குகிறார். யுவன் இசை அமைக்கிறார். யுவா ஒளிப்பதிவு செய்கிறார் படத்தின் பூஜை நேற்று நடந்தது. படப்பிடிப்புகள் ஜனவரி 2ந் தேதி முதல் தொடங்குகிறது. இதில் பூஜா தேவரியா எழுத்தாளராக நடிக்கிறார் அவர் பெயர் ரங்குஸ்கி, ஹீரோ பெயர் ராஜா. இரண்டையும் இணைத்து படத்துக்கு ராஜா ரங்குஸ்கி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.