'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தம்மு தெலுங்குப் படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி பின்னர், இந்திப்பட வாய்ப்பு கிடைத்ததால் திடீரென கழன்று கொண்டார் ஸ்ருதிஹாசன். இந்த தகவல் வெளியான உடனே, ஜூனியர் என்டிஆரை பல நடிகைகளும் மொய்க்க ஆரம்பித்தனராம். அவர்களில் தமன்னா, த்ரிஷா என டாப் ஸ்டார்களும் உண்டாம். ஆனால் என்டிஆரின் பார்வை காஜல் அகர்வால் மீதே இருந்திருக்கிறது. தமிழில் வாய்ப்பு இல்லாமல்; பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கும் காஜல் இப்படியரு வாய்ப்பை நழுவ விடுவாரா என்ன? உடனே சந்தோஷமாக நடிக்க ஒப்புக் கொண்டாராம் காஜல்.
அதேநேரம் தனது சம்பளத்தையும் வெகுவாக ஏற்றி கேட்ட காஜல், அதிலும் பாஸ் ஆகியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.