வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
சர்ச்சைகளையும் தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மாவையும் பிரித்து வைக்கமுடியாத ஒன்றாகிவிட்டது. விஜயவாடாவைச் சேர்ந்த மறைந்த அரசியல் பிரமுகர் வங்கவீட்டி மோகன ரங்காவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வங்கவீட்டி எனும் திரைப்படத்தை ராம் கோபால் வர்மா உருவாக்கினார். கடந்த வாரம் வெளிவந்த இப்படத்தில் ரங்காவை ரௌடி போல் சித்தரித்துள்ளதாக இயக்குனருக்கு எதிராக மோகன ரங்காவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மல்லாடி விஷ்ணு இது குறித்து கூறுகையில் மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்ட ரங்காவின் உண்மையான முகத்தை தனது திரைப்படத்தில் பதிவு செய்ய தவறிய இயக்குனர் ராம் கோபால் வர்மா மோகன ரங்காவை ரௌடி போல் சித்தரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மோகன ரங்கா ஆதரவாளர்கள் பலரும் 24 மணி நேரத்திற்குள் இப்படத்தை தடை செய்ய வேண்டி இயக்குனருக்கு மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.