டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தாய்மொழியான மலையாள படங்களில் பிசியான நடிகையான பிறகு தமிழுக்கு வந்தார் நயன்தாரா. அதேபோல் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்த போதும் தாய்மொழியை மறக்காமல் அவ்வப்போது ஒரு படத்தில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டு வருகிறார். அந்த வகையில், மம்மூட்டியுடன் அவர் நடித்த பாஸ்கர் த ராஸ்கல் என்ற மலையாள படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தில் மம்மூட்டி நடித்த வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார்.
மேலும், இப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை கேட்டபோது ஏற்கனவே நடித்த கேரக்டரில் மீண்டும் நடிக்க விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார். அதையடுத்து அமலாபால் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், வேலையில்லா பட்டதாரி-2, திருட்டுப்பயலே-2, வடசென்னை உள்பட 4 படங்களில் அமலாபால் பிசியாக இருப்பதால், இப்போது இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவை அப்படத்தில் நடிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது. ஏற்கனவே தமிழில் ரஜினி நடித்த லிங்கா படத்தில் சோனாக்ஷி சின்ஹா நடித்திருப்பதால் இந்த படத்தை அவர் ஏற்றுக்கொள்ள அதிக வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள்.