Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கலாபவன் மணியின் வாழ்க்கையை படமாக்குகிறார் வினயன்..!

28 டிச, 2016 - 17:22 IST
எழுத்தின் அளவு:
Director-Vinayan-to-make-Kalabhavan-Manis-biobic

மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் வாழ்க்கையை படமாக எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார் மலையாள இயக்குனர் வினயன். கலாபவன் மணியின் திறமையை உலகுக்கு அறிமுகப்படுத்தியதில் இயக்குனர் வினயனின் பங்கு மிக முக்கியமானது. மற்ற எந்த இயக்குனரை விடவும், இவர் மட்டுமே கலாபவன் மணியை வைத்து 13 படங்கள் இயக்கியுள்ளார். வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் (தமிழில் 'காசி'), ராட்சஸ ராஜாவு, கருமாடி குட்டன் என இவரது படங்களில் தான் கலாபவன் மணிக்கு தனது நடிப்பு பசியை போக்கிக்கொள்ளும் கதாபாத்திரங்கள் கிடைத்தன.


தற்போது கலாபவன் மணியின் வாழ்க்கையை படமாக எடுத்து தனது சிஷ்யனை கௌரவப்படுத்தும் அதே நேரத்தில் இந்தப்படம் மூலம் சிலருக்கு பதிலடி கொடுக்கவும் திட்டம் வைத்துள்ளாராம். காரணம் கலாபவன் மணி மறைந்த சில நாட்கள் கழித்து கலாபவன் மணிக்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு வினயனுக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணித்ததில் சில முன்னணி நடிகர்களுக்கு பங்கு உண்டு என வினயன் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.


இப்போது கலாபவன் மணி மீது பாசத்தை பொழியும் இந்த முன்னணி நடிகர்கள், உண்மையில் அவரை ஆரம்ப காலத்தில் எவ்வாறு நடத்தினார்கள் என்கிற விஷயத்தையும் இந்தப்படத்தில் காட்சிப்படுத்துவார் என்கிற பரபரப்பையும் அவரை சுற்றியுள்ளவர்கள் பரப்பி வருகிறார்கள்.. கலாபவன் மணி கதாபாத்திரத்தில் நடிக்கப்போகும் நடிகர் என்பதை கூடிய விரைவிலேயே அறிவிக்க இருக்கிறாராம் வினயன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in