டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஷாரூக்கான். ஹிருத்திக் நடிப்பில் காபில் படமும், ஷாரூக் நடிப்பில் ரயீஸ் படமும் வருகிற ஜன., 25-ம் தேதி ஒரேநாளில் ரிலீஸாக இருக்கின்றன. இரண்டுமே பெரிய நடிகர்களின் படங்கள் என்பதால் வசூல் கண்டிப்பாக பாதிக்கப்படும். இதற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் ஹிருத்திக் ரோஷன் மற்றும் அவரது தந்தை ராகேஷ் ரோஷன்.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹிருத்திக்கிடம், ரயீஸ் படத்துடன் மோதுவது பற்றி கருத்து கேட்டபோது, அவர் கூறியதாவது... ‛‛இது முறையானதா, அல்லது முறையற்றதா... என்பது தெரியவில்லை. ஆனால் இது வருத்தமான விஷயம். ஹாலிவுட் படங்களில் இதுபோன்று நடப்பது கிடையாது. பேட் படம், சூப்பர் மேன் படத்துடன் ரிலீஸாகாது. லார்டு ஆப் தி ரிங்ஸ் படம் ஹாரி பாட்டர் படத்துடன் ரிலீஸாகாது. ஏனென்றால் அவர்கள் ஒரே தேதியில் பெரிய படங்களை ரிலீஸ் செய்ய மாட்டார்கள். ஆனால் பாலிவுட்டில் அப்படியில்லை... என்னைபொறுத்தமட்டில் இரண்டு படங்களும் நன்றாக ஓடும், அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் வசூல் ரீதியாக பாதிப்பு இருக்கும். இரண்டு படங்களும் ரூ.100 கோடி ஈட்டுவது கொஞ்சம் சிரமமாக இருக்கும். அதனால் தான் என் தந்தை ஆரம்பத்திலிருந்தே இதுப்பற்றிய தனது வருத்தத்தை தெரிவித்தார், அதோடு அதை தவிர்க்கவும் முயற்சித்தார், ஆனால் முடியவில்லை'' என்றார்.