Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெய் படத்திலும் பிறநிகழ்ச்சிகளை கலாய்ப்பது தொடர்கிறது!

28 டிச, 2016 - 15:26 IST
எழுத்தின் அளவு:
Fun-continuous-in-jai-film-also

சமீபகாலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கலாய்ப்பது சினிமாக்களில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஜீ தமிழ் சேனலில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் அவர் அடிக்கடி சொல்லும், என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா -என்ற வார்த்தை வைத்து விஜய் டிவியின் அது இது எது நிகழ்ச்சியில் அவரை கலாய்த்தனர். முதலில் அதை பொறுத்துக்கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன், அதே எபிசோடு அவர்கள் மீண்டும் ஒளிபரப்பியபோது செம டென்சனாகி விட்டார். விஜய் டிவிக்கு எதிராக குரல் கொடுத்தார்.


ஆனால் அதன்பிறகு, அவரை சினிமாக்களில் கலாய்ப்பது தொடர்ந்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் நடித்த கடவுள் இருக்கான் குமாரு படத்திலும் கலாய்த்தனர். அப்போதும் எதிர்ப்பு தெரிவித்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த நிலையில், தற்போது ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் காட்சியில், ஜெய், ஜீ சேனல்களின் நிகழ்ச்சிகளை கலாய்த்துள்ளனர். சொல்வதெல்லாம் உண்மை என்பதற்கு பதிலாக சொல்ற தெல்லாம் கேட்கிறதில்ல, அது இது எது என்பதை அது இது தூ -என்றும், நாட்டு நடப்பு என்கிற பெயரில் அனைத்து மீடியாக்களிலுமே பிரபலங்கள் அமர்ந்து காரசாரமாக பேசுவதை, பேசியே சாவுங்கடா என்று குறிப்பிட்டுள்ளனர்.


இதுபற்றி அப்பட டைரக்டர் மகேந்திரன் ராஜாமணி கூறுகையில், இந்த படம் நண்பனின் காதலுக்காக போராடும் நண்பர்களைப்பற்றிய கதையில் உருவாகியுள்ளது. அவர்களது பிரச்சினை ரசிகர்களுக்கு காமெடியாக இருக்கும். அப்போது வரும் பாடல் காட்சியில்தான் ஒரு ஜாலிக்காக மீடியா நிகழ்ச்சிகளை வேறு தலைப்புகளில் குறிப்பிட்டிருக்கிறோம். ஆனால் இது யாரையும் கலாய்ப்பது போல் இருக்காது. படத்தில் நடித்திருப்பவர்களை கலாய்ப்பது போல்தான் இருக்கும் என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in