பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
காதலி சமந்தாவுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வரும் நாகசைதன்யா, அவரது தந்தையான நாகார்ஜூனாவின் வற்புறுத்தலின் பேரில் காதலி சமந்தாவை விரைவில் மனைவியாக்கி கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளாராம். நாகார்ஜூனா மற்றும் அவரது மூத்த மனைவி லக்ஷ்மியின் மகன் நாகசைதன்யா, பெற்றோரின் பிரிவிற்கு பின்னர் தந்தையின் பராமரிப்பிலேயே வளர்ந்து வருகின்றார். நாகார்ஜூனா மற்றும் அவரது இரண்டாவது மனைவி அமலாவின் மகன் அகில் ஸ்ரேயா பூபல் என்பவரை 2017 ஏப்ரலில் திருமணம் செய்து கொள்ளவிருக்கின்றார். தனது மூத்த மகனுக்கு திருமணம் செய்யாமல் இளைய மகனுக்கு திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்ளாத நாகார்ஜூனா, திருமணத்தை தள்ளிப்போட்டு வந்த நாகசைதன்யாவிடம் எடுத்துக் கூறி மனதை மாற்றியுள்ளார். தந்தையின் விருப்படி அகில் திருமணத்திற்கு 10-15 நாட்கள் முன்னதாக நாகசைதன்யா-சமந்தாவின் திருமணம் நடைபெறும் என அக்னினேனி நாகார்ஜூனா குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.