ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் கைதி நம்பர் 150 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றை படக்குழு ஏற்பாடு செய்துள்ளது. ஜனவரி 4ல் விஜயவாடாவில் கைதி நம்பர் 150 படத்தின் புரமோஷனை நடத்த தயாரிப்பாளர் ராம் சரண் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து வருகின்றார்.
டோலிவுட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும் முன்னணி நடிகர்களுக்கும் விழாவிற்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளார் ராம் சரண். நிகழ்ச்சியினை ராணா மற்றும் நவ்தீப் தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ராணாவும், நவ்தீப்பும் ராம்சரணின் நெருங்கிய நண்பர்கள். நவ்தீப் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். ராணாவும் ஒரு சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிவியப்பட்டவர். ராம் சரண் கேட்டுக் கொண்டதற்கிணங்க நவ்தீப்பும், ராணாவும் இணைந்து இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனராம்.
இயக்குனர் விவி வி நாயக் இயக்கும் கைதி நம்பர் 150 படத்தின் புரமோஷனில், இப்படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்கள் பாடி ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளாராம். சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் கைதி நம்பர் 150 படத்தில் சிரஞ்சீவியுடன் ராய் லக்ஷ்மி குத்தாட்டம் போட்டுள்ளார்.