Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்-61 படத்தில் ஜோதிகா

28 டிச, 2016 - 11:03 IST
எழுத்தின் அளவு:
Vijay---Jyothika-to-team-up-again

ஒரு படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த கதாநாயகியை அடுத்தடுத்த படங்களிலும் ஹீரோக்கள் சிபாரிசு செய்கிறார்கள் என்றால், அதற்கு ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி முக்கியமான காரணம். 'கத்தி', 'தெறி' ஆகிய படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த சமந்தா மீண்டும் விஜய்யுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.


விஜய்யை வைத்து 'தெறி' படத்தை இயக்கிய அட்லி இந்தப் படத்தை இயக்குகிறார். தெறி கூட்டணியான விஜய் - சமந்தா - அட்லி மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ள விஜய்யின் 61-ஆவது படமான இப்படத்தை 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிக்கிறது.


இந்தப் படத்தில் காஜல் அகர்வால் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. அவர் இரண்டு கோடி சம்பளம் கேட்டதால் அவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் விஜய். அதன் பிறகே 'தெறி'யில் கதாநாயகியாக நடித்த சமந்தாவையே கதாநாயகியாக நடிக்க வைக்க தீர்மானித்துள்ளார்கள். இதனை உறுதிப்படுத்தும் வகையில் சமந்தாவும் சமீபத்தில் ஒரு ரசிகரின் கேள்விக்கு பதிலளிக்கையில் விஜய்யுடன் மீண்டும் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் சமந்தா மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது.


இந்தப் படத்தில் சமந்தா உடன் இன்னொரு கதாநாயகியும் நடிக்கிறார். இந்த கேரக்டருக்கு ஜோதிகாவை கமிட் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் - ஜோதிகா கூட்டணி ஏற்கனவே குஷி, திருமலை போன்ற வெற்றி படங்களில் தொடர்ந்தது. தற்போது கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி தொடரும் என தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in