ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்திற்குப் பின் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த படங்கள் என்றாலே பலான படம் என்ற இமேஜ் ஏற்பட்டுவிட்டது. அதனாலேயே அவரது படத்துக்கு பெண்கள் மற்றும் ஃபேமிலி ஆடியன்ஸ் வருவது பெருமளவில் குறைந்துவிட்டதாக தியேட்டர்கார்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கடவுள் இருக்கான் குமாரு படம் மிகப்பெரிய தோல்வியடைந்து தயாரிப்பாளரையும், விநியோகஸ்தர்களையும், தியேட்டர்காரர்களையும் நஷ்டமடைய வைத்துவிட்டது. தன் மேல் படிந்த இந்த பேட் பாய் இமேஜை மாற்றிக்கொள்ளாவிட்டால் ஜி.வி.பிரகாஷ்குமார் தாக்குப்பிடிப்பது கஷ்டம் என்பதே தற்போதையநிலை.
இப்படியான சூழலில் ஜி.வி.பிரகாஷ் குமார், கீர்த்தி கார்பண்டா நடித்துள்ள 'புரூஸ்லீ' படம் பொங்கல் ரிலீசாக திரைக்கு வரவிருக்கிறது. இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளரான பிரசாந்த் பாண்டிராஜ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் நேற்றைய முன்தினம் தணிக்கைக் குழுவினருக்கு திரையிடப்பட்டது. புரூஸ்லீ படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர்கள் அனைத்து வயதினரும் பார்க்க கூடிய படம் என்று அதாவது 'U' சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இதனால் ஜி.வி.பிரகாஷ்குமார், இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் உள்ளிட்ட 'புரூஸ்லீ' படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து தோல்விப்படங்களைத் கொடுத்து வரும் 'கெனன்யா ஃபிலிம்ஸ்' நிறுவனத்திற்கு 'புரூஸ்லீ' படமாவது வெற்றியைத் தேடிக்கொடுக்குமா என்று பார்ப்போம்..!