விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'புலி முருகன்' படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி கோடிகளை அள்ளிக்குவித்து வருகிறது.. ஆனால் தமிழில் டப்பிங் செய்யாமல் நம்ம ஊர் ஹீரோக்களை நடிக்கவைத்து ரீமேக் செய்யலாம் என ஒரு முயற்சி நடக்கிறது.. ஆனாலும் மிகவும் ரிஸ்க்கான சண்டைகாட்சிகளும் தவிர புலியை வைத்து படமாக்கும் சிரமங்களும் இருப்பதன் காரணமாக அதற்கு சில தடைகள் முன்னிற்கின்றன. ஆனால் கன்னடத்திலும் இந்தியிலும் இதனை ரீமேக் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டனவாம்.
இந்தநிலையில் 'புலி முருகன்' படக்குழுவினர் விரைவில் இந்தப்படத்தை '3டி'யில் உருவாக்கி வெளியிடப்போவதாக, கிறிஸ்துமஸ் ட்ரீட்டாக ஒரு மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆக்சன் காட்சிகளும் புலியுடன் மோகன்லால் மோதும் காட்சிகளும் 3டி' எபக்ட்டில் பார்க்கும்போது பார்வையாளர்களை மிகவும் பரவசப்படுத்தும் என்பது உறுதி.. மலையாள சினிமா உலகத்தை பொறுத்தவரை எந்த பட்ஜெட்டுக்குள் இந்தப்படத்தின் 3டி பணிகளை முடிக்கமுடியுமோ, அதற்குள் முடித்து, படத்தை விரைவில் வெளியிட இருக்கிறார்களாம்.