'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் கவர்ச்சி புயலான சன்னி லியோன், தற்போது இயக்குநர் ராகுல் தொலாக்கிய இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‛ரயீஸ் படத்தில் ‛லைலா ஓ லைலா' என்ற பாட்டிற்கு செம குத்தாட்டம் போட்டிருக்கிறார். ரசிகர்களிடத்தில் இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சன்னியிடம் ஷாரூக்கானுடன் நடித்ததை பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்து சன்னி லியோன் கூறியதாவது....." நான் இதுவரை முன்னணி நடிகர்களுடன் நடித்தது இல்லை என்று பலர் கூறினர். இப்படத்தின் மூலம் அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இது தான், வாழ்கையில் எப்போது வேண்டுமென்றாலும் எதும் நடக்கும் என்பதுக்கு இது ஒரு எடுத்துகாட்டு. செய்யும் வேலையில் கடின உழைப்பும், நல்ல எண்ணமும் இருந்தால் நிச்சயம் நல்லது நடக்கும்" என்று கூறினார்.