'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கல்லூரி படத்தில் அறிமுகமானவர் அகில். அதன்பிறகு வால்மீகி, மாசாணி, ரெட்டை வாலு உள்பட பல படங்களில் நாயகனாக தொடர்ந்த அவர், சமீபத்தில் திரைக்கு வந்த இளமி படத்தில் அதிரடி வில்லனாக நடித்திருந்தார். அந்த படத்தின் கிளைமாக்சில் ஹீரோவாக நடித்த யுவன், ஹீரோயினியாக நடித்த அனு கிருஷ்ணா ஆகிய இருவரையும் தலை, கால்கள், கைகள் என வெட்டி முண்டமாக சாய்த்து விடுவார் அகில். அந்த வேடத்தில் அவர் கொடூரமான வில்லனாக நடித்திருந்தபோதும் அகிலை வித்தியாசமான கோணத்தில் பார்த்து அவருக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன.
இருப்பினும், வில்லன் வேடத்தை தொடர விரும்பாத அகில், தற்போது அலைபேசி என்றொரு படத்தில் மீண்டும் நாயகனாக நடித்து வருகிறார். அதுவும், இளமி படத்தில் தான் வெட்டி சாய்த்த அதே அனுகிருஷ்ணாவையே, உயிருக்கு உயிராக காதலிக்கும் வேடத்தில் நடிக்கிறார் அகில். மேலும், இந்த படம் அஜீத்-தேவயானி நடிப்பில் வெளியான காதல் கோட்டை படம் பாணியில், அலைபேசியிலேயே காதலிக்கும் கதையில் உருவாகிக்கொண்டிருக்கிறது.