ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
யாவரும் நலம் பட புகழ் விக்ரம் குமார் இயக்கத்தில், சூர்யா மூன்று வேடங்களில் நடித்து வெளியான படம் ‛24'. டைம் மிஷன் கதையை மையமாக வைத்து வெளிவந்த இப்படத்தில் சூர்யாவுடன் சமந்தா, நித்யா மேனன், சரண்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்திற்கு பலமாக இருந்தது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் தற்போது இப்படத்திற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
அதாவது, உலகளவில் புகழ் பெற்ற சினிமா இணையதளமான ‛IMDB' எனும் இணையதளம் 2016ம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த டாப்-10 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 10-ல் 9 படங்கள் பாலிவுட் படங்கள், ஒரே ஒரு தமிழ்படம் இடம்பெற்றுள்ளது. அதுவும் சூர்யா நடித்த 24 படம். இந்த தகவலை சூர்யாவின் படத் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் பெருமையோடும், மகிழ்ச்சியுடனும் கூறியுள்ளது.