வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சில காவிய படைப்புகளுக்கு இருக்கும் வரவேற்பும், அங்கீகாரமும் குறையவே குறையாது, அப்படிப்பட்ட படங்களில் ரஜினியின் ‛பாட்ஷா' படமும் ஒன்று. ரஜினியின் திரையுலக பயணத்தில் பாட்ஷாவிற்கு எப்போதும் ஒரு இடம் உண்டு. திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா. ரஜினிகாந்தின் அசாத்திய நடிப்பு, விறு விறுவென நகரும் திரைக்கதை, எவராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத காலம் சென்ற ரகுவரனின் நடிப்பு, நாடி நரம்புகளுக்குள் புகும் தேவாவின் இசை மற்றும் வியக்க வைக்கும் அதிரடி காட்சிகள் ஆகியவை தான் பாட்ஷா படத்தின் சிறப்பிற்கு காரணம் என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம்.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், சத்யா மூவிஸ் தயாரிப்பில் வெளிவந்த இப்படம், தற்போது நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றி, 5.1 டிஜிட்டல் ஒலி-ஒளி அமைப்பில் வெளியாக உள்ளது. இந்த நவீன தொழில் நுட்பத்தில் மெருகேறிய பாட்ஷா படத்தின் டிரைலர், கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகி, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தினந்தோறும் சராசரியாக ஒரு லட்சம் பார்வையாளர்கள், இந்த டிரைலரை யுடியூப்பில் கண்டுள்ளார்கள்.
இதுப்பற்றி சத்யா மூவிஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது... "டிஜிட்டல் பாட்ஷா டிரைலருக்கு எதிர்பார்த்ததை நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி, வர்த்தக உலகிலும் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஜப்பான் நாட்டு ரசிகர்களும் இந்த டிரைலருக்கு அளித்த ஆதரவை வெறும் வார்த்தைகளால் சொல்ல இயலாது. சென்னையில் நடைபெற இருக்கும் பிரத்யேக காட்சிக்கு ஜப்பான் ரசிகர்கள் வரவுள்ளனர். அதுமட்டுமின்றி, அவர்கள் ரஜினியையும் நேரில் சந்திக்க உள்ளார்கள். டிஜிட்டல் பதிப்பில் உருவாகி இருக்கும் பாட்ஷா படத்தை ஸ்பேஸ் பாக்ஸ் ஜப்பான் நிறுவனம் ஜப்பானில் வெளியிட உள்ளது. தற்போது படத்தின் வசனங்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கும் (SUBTITLE) பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஸ்வீடன் மற்றும் இன்னும் சில நாடுகளில் இருந்தும் எங்களின் டிஜிட்டல் பாட்ஷாவிற்கு, வர்த்தக ரீதியாக நல்லதொரு வரவேற்பு கிடைத்து வருகிறது" என்று சத்யா மூவிஸ் தெரிவித்திருக்கிறது.
பாட்ஷா டிஜிட்டல் வடிவம், 2017 - ஜனவரி மாதத்தில் வெளியாகும் என தெரிகிறது.