Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமீர் படத்தினால் பாலா பட வாய்ப்பை இழந்த அதிதி!

23 டிச, 2016 - 09:12 IST
எழுத்தின் அளவு:
i-missed-my-movie-in-the-direction-of-bala-sir-says-actress-athithi

சசிகுமார்-வரலட்சுமி நடித்த தாரைத்தப்பட்டை படத்தை இயக்கிய பாலா, அதன்பிறகு குற்றப்பரம்பரை காலகட்டத்து கதையில் ஒரு படம் இயக்கப்போவதாக கூறினார். அதையடுத்து அவருக்கும், பாரதிராஜாவுக்குமிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த கதையை கிடப்பில் போட்டார். பின்னர் பிராமணர் சம்பந்தப்பட்ட ஒரு கதையை சாட்டை யுவனை நாயகனாக வைத்து இயக்கப்போவதாக பாலா தரப்பில் செய்தி வெளியானது. ஆனால் தற்போது பாலா இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாக இன்னொரு புதிய தகவல் கோலிவுட்டில் உலவிக்கொண்டிருக்கிறது. ஆனால் பாலாவின் புதிய படத்தில் யார் நாயகனாக நடிக்கப்போகிறார்கள் என்பது அவருக்கே வெளிச்சம்.


இந்த நிலையில், பாலாவின் புதிய படத்தில் நடிப்பதற்காக, சமீபத்தில் வெளியான பட்டதாரி படத்தில் நாயகியாக நடித்த அதிதியை அழைத்து அவர் பேசியுள்ளார். ஆனால், அமீர் இயக்கும் சந்தனதேவன் படத்தில் நடிக்க அவர் கால்சீட் கொடுத்திருப்பதாக அறிந்த பாலா, இன்னொரு படத்திற்கு கால்சீட் கொடுத்திருக்கும்போது என் படத்திலும் நடிப்பது சாத்தியமல்ல. கால்சீட் பிரச்சினை ஏற்படும் என்று சொல்லி விட்டாராம். அதனால், பாலாவின் பரதேசி படத்தின் நடித்த வேதிகா போன்று தனக்கும் ஒரு நல்ல வேடம் கிடைக்கும் என்ற ஆசையில் சென்ற அதிதி, ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறார். என்றாலும், டைரக்டர் பாலா தன்னை அவர் படத்தில் நடிக்க அழைத்ததே தனது நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று பெருமிதத்துடன் காணப்படுகிறார் அதிதி



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in