பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் 'AK57' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பல்கேரியாவிலேயே நடத்தப்பட்டுமுள்ளது. இரண்டாவதுமுறையாக அங்கு நடந்து வருகிறது படப்பிடிப்பு. தற்போது நடைபெற்றுவரும் ஷெட்யூல் நாளையுடன் அதாவது டிசம்பர் 23-ஆம் தேதியுடன் முடிவடைகிறதாம். அன்றே அஜித் அங்கிருந்து புறப்படுகிறார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை தன் மனைவி குடும்பத்தாருடன் கொண்டாடுவதற்காகவே டிசம்பர் 23-ஆம் தேதியுடன் பல்கேரியா படப்பிடிப்பை முடித்துக்கொள்ளும்படி சொன்னாராம் அஜித். பல்கேரிய ஷட்யூலோடு 'AK57' படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிடுகிறதாம். மீதி 20 சதவிகித படப்பிடிப்பை ஹைதராபாத்தில் உள்ள பிலிம்சிட்டியில் விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தின் பாடல்களை மார்ச் மாதம் வெளியிடவும், படத்தை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 அன்று வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் நடித்துள்ள இப்படத்தில், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடித்துள்ளார். 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் ஜி.தியாகராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஜாஸ் சினிமா நிறுவனம் வாங்கி இருப்பதாக தகவல் அடிபட்டு வருகிறது.