ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பாஜிராவ் மஸ்தானி படத்திற்கு பிறகு ஹாலிவுட் சென்று விட்ட நடிகை பிரியங்கா சோப்ரா, அங்கு ஹாலிவுட் சீரியலான குவாண்டிகோ மற்றும் ஹாலிவுட் படமான பேவாட்ச் படத்தில் நடித்து வந்தார். இதனால் அவர் பாலிவுட் படங்களிலேயே நடிக்கவில்லை. இந்நிலையில் அடுத்தாண்டு தான் இரண்டு பாலிவுட் படங்களில் நடிப்பதாக பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
இதுப்பற்றி சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா கூறுகையில், ‛‛அடுத்தாண்டு இரண்டு பாலிவுட் படங்களில் நடிக்க உள்ளேன், அது எந்தப்படம் என்று முடிவு செய்ய இந்தியா வந்துள்ளேன். ஜனவரி மாதத்திற்குள் என்னென்ன படங்கள் என்பது முடிவாகிவிடும்'' என்று கூறியுள்ளார்.
பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ‛பேவாட்ச்' படம் அடுத்தாண்டு மே 26-ம் தேதி ரிலீஸாக உள்ளது.