'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சரித்திர படங்களுக்கு மிகப் பொருத்தமான நாயகியாக அறியப்படும் நடிகை அனுஷ்கா, பாகுபலி, ருத்ரம்மாதேவி படங்களுக்கு பின்னர் மீண்டும் ஓம் நமோ வெங்கடேஷாய எனும் வரலாற்று படத்தில் நடித்து வருகின்றார். நாகார்ஜூனா ஹாத்தி ராம் பாபா எனும் பெருமாள் பக்தர் வேடமேற்று நடிக்கும் ஓம் நமோ வெங்கடேஷாய படத்தை இயக்குனர் ராகவேந்திர ராவ் இயக்குகின்றார். முதலில் சிறப்பு தோற்றத்தில் அனுஷ்கா இப்படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. தற்போது அனுஷ்கா இப்படத்தில் பல கெட்டப்புகளில் நடித்திருப்பதாக படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. நாகார்ஜுனா படங்களுக்கு தனி அக்கறை காட்டும் அனுஷ்கா, இப்படத்திற்காக நீண்ட நேரம் ஆனாலும் அலுக்காமல் மேக்கப் போட்டு நான்கு வித கெட்டப்புகளில் நடித்துள்ளாராம். இப்படத்தில் கிருஷ்ணம்மா எனும் வேடமேற்று நடித்துள்ள அனுஷ்கா, மேலும் நான்கு கெட்டப்புகளில் நடித்துள்ளாராம். அதில் ஒன்று கோடா தேவி எனும் வேடம் இக்கதாபாத்திரத்திற்கென 25 மீட்டர் சேலையை அனுஷ்கா அணிந்து நடித்துள்ளாராம். மேலும் ஜெய்பூர் மற்றும் ராஜஸ்தானிலிருந்து பிரத்யேக அணிகலன்கள் அனுஷ்காவிற்காக வரவழைக்கப்பட்டதாம்.