ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காக்கா முட்டை மணிகண்டன் இயக்கிய குற்றமே தண்டனை படத்திற்கு பிறகு ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை, கடோல்கஜன், வண்டி, பில்லா பாண்டி உள்பட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் விதார்த். இதில் குரங்கு பொம்மை படத்தை நிதிலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். விதார்த்துடன் டைரக்டர் பாரதிராஜா, டெல்னா டேவிஸ், கஞ்சா கருப்பு, பி.எல்.தேனப்பன் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.
இந்நிலையில், இந்த படத்தின் பப்ளிசிட்டிகளை தொடங்கி விட்டனர். அதன் முதல்கட்டமாக, குரங்கு பொம்மை படத்தின் அனிமேட்டட் போஸ்டரை நாளை டிசம்பர் 23-ந்தேதி வெளியிடுகிறார்கள். அதை நடிகர் விஜயசேதுபதி தனது பேஸ்புக்கில் வெளியிடுகிறார். இதேபோல் முன்பு விதார்த் நடித்த குற்றமே தண்டனை படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் விஜயசேதுபதிதான் வெளியிட்டார். அந்த படம் வெற்றி பெற்றது. அதனால்தான் அதே செண்டிமென்டை தொடருகிறாராம் விதார்த். மேலும், விஜயசேதுபதி-விதார்த் இருவரும் கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சி எடுத்த சமகாலத்து நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.