'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள சர்வானந்த் தெலுங்கிலும் பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார். தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் திரைப்படமொன்றில் நாயகனாக நடித்து வரும் சர்வானந்த், இயக்குனர் மாருதி இயக்கத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டு வந்தது. தற்போது இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நானி நடிப்பில் பலே பலே மகாதேவோ எனும் வெற்றிப் படம் கொடுத்த இயக்குனர் மாருதி அடுத்ததாக சர்வானந்த் நாயகனாக நடிக்கும் மஹானுபவுடு படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவி கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாம். சர்வானந்திற்கு ஜோடியாக நடிக்கும் நாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞருக்கான தேடலில் இயக்குனர் மாருதி தற்போது ஈடுபட்டுள்ளாராம்.