வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இசை அமைப்பாளர்கள் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் நடிகர்கள் இசை அமைக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வரிசையில் சிம்புவும் இசை அமைப்பாளராகி இருக்கிறார். விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் சக்கப் போடு போடு ராஜா படத்திற்கு சிம்புதான் இசை அமைக்கிறார். சேதுராமன் இயக்குகிறார்.
இசை அமைப்பாளர் ஆனது பற்றி சிம்பு கூறியிருப்பதாவது: ‛‛இதற்கு முன்பே பல படங்களுக்கு இசை அமைக்க கேட்டார்கள். நடிப்புக்கே நேரம் சரியாக இருந்ததால் சாரி சொல்லிவிட்டேன். இப்போதும் கேட்டார்கள். கதை கேட்டேன் பிடித்திருந்தது ஒப்புக் கொண்டேன். சந்தானம் என் நண்பர் ஒரு வேளை அவர் படமாக இல்லாமல் இருந்திருந்தால் ஒப்புக் கொண்டிருப்பேனா என்பது சந்தேகம்தான். நான் இசை அமைப்பது புதிய விஷயமுமில்லை. அதிசயமும் இல்லை. ஒரு படத்துக்கு இசை அமைக்கிறோம் என்ற பயமும் இல்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்வேன். அது எப்படி இருக்கிறது என்பதை மக்கள் சொல்லட்டும்'' என்கிறார் சிம்பு.