Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

திலீப்-2016 ; ஒரு பார்வை

21 டிச, 2016 - 09:22 IST
எழுத்தின் அளவு:
dileep-movies-of-2016-is-a-throwback--rewind

மலையாள சினிமாவின் ஜனப்ரிய நாயகன் திலீப் நடித்து இந்த வருடம் மூன்று படங்களே ரிலீசாகியுள்ளன.. என்றாலும், கடந்த வருடத்தின் இறுதி வாரத்தில்(டிச-25) வெளியான '2 கண்ட்ரீஸ்' படத்தையும் இந்த வருட கணக்கில் தான் சேர்த்துக்கொள்ள வேண்டும்.. காரணம் அந்தப்படம் நீண்ட நாட்கள் ஓடியதும், உலகம் முழுவதும் சேர்த்து 55 கோடி ரூபாய் வசூலித்ததும் கேரளாவில் மட்டுமே 30 கோடி வசூலித்தும் இந்த வருடத்தில் தானே நிகழ்ந்தன. அந்தவகையில் இந்த வருடத்தின் துவக்க மாதங்கள் திலீப்பிற்கு உற்சாகம் கொடுப்பதாகவே அமைந்தன..


அடுத்ததாக ஏப்ரலில் சித்திக் கதை எழுத, லால் டைரகச்னில் வெளியான 'கிங் லையர்' படமும் திலீப்பிற்கு கௌரவமான வெற்றியையே கொடுத்தது. கேரளாவில் மட்டுமே சுமார் 20 கோடி வசூலித்தது இந்தப்படம்.. திலீப் படத்தின் பட்ஜெட்டை கணக்கில் கொண்டால் இது சூப்பர் லாபம் என்றே சொல்லலாம். அதன்பின்னே நட்புக்காக.., இல்லையில்லை ஒரு மரியாதைக்காக என்று கூட சொல்லலாம்.. அப்படி நடித்துக்கொடுத்த படம் தான் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய 'பின்னேயும்' படம்.. நீண்ட நாட்கள் கழித்து திலீப்பும் காவ்யா மாதவனும் இணைந்து நடிக்கிறார்கள் என்கிற அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், விமர்சனம், வசூல் என இரண்டிலுமே மண்ணை கவியது இந்தப்படம்.


அடுத்ததாக திலீப், வேதிகா ஜோடியாக நடித்து வெளியான 'வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்' படமும் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவர தவறியது. ஆனாலும் வசூல் ரீதியாக இந்தப்படம் தப்பித்துவிட்டது என்றே சொல்லலாம். தற்போது அவர் நடித்து வரும் 'ஜார்ஜேட்டன்ஸ் பூரம்' படம் இந்த வருடமே வெளியாக வேண்டியது சில காரணங்களால் அடுத்த வருடத்திற்கு தள்ளிப்போய் விட்டது..


இதுதவிர பிக்பாக்கெட், கம்மர சம்பவம், புரபசர் டிங்கன் என திலீப் கைவசம் இப்போது மூன்று படங்கள் இருக்கின்றன. அவரது வாழ்வில் மிக முக்கியமான இன்னொரு நிகழ்வாக நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டதால் இந்தவருடம் திலீப்பிற்கு நல்லதொரு வருடமாகவே கடந்து போயிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in