ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழ் திரையுலகிலும் கூட அறிமுகமான வேகத்திலேயே அதிரடியாக படங்களை கைப்பற்றி நம்பிக்கை நட்சத்திரமாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். இப்போது இவரை தொடர்ந்து காயத்ரி சுரேஷ் என்கிற நடிகையும் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
மிஸ் கேரளா 2014 பட்டம் வென்ற இவர் அறிமுகமானது கடந்த வருடம் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடித்த ஜமுனா பியாரி என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாகத்தான். சமீபத்தில் மலையாளத்தில் இவர் நடித்த 'ஒரேமுகம்' என்கிற படம் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது நிவின்பாலி நடிக்கும் 'சகாவு' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.
மலையாளத்தில் ஓரளவு தெரிந்த முகமாகிவிட்டால், அடுத்தபடியாக தமிழுக்கு வந்துதானே ஆகவேண்டும்.. அப்படித்தான் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் 4ஜி படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். சி.வி.குமார் தயாரிக்கும் இந்தப்படத்தை வெங்கட் பிரபாகர் என்பவர் இயக்குகிறார். இவரும் கீர்த்தி சுரேஷை போல ஒரு ரவுண்டு வருவாரா என பார்க்கலாம்.