அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை அபர்ணா வினோத். கேரள மாநிலம் காசர்கோடை சேர்ந்த அபர்ணாவுக்கு சினிமா மீது தனியாத தாகம். நீண்ட போராட்டத்திற்கு பிறகு கடந்த ஆண்டு கோஹினூர் என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு நிஜன் நிண்ட கூடயேயுண்டு என்ற படத்தில் நடித்தார். பைரவா படத்திற்கு ஆடிசன் நடந்தபோது அதில் கலந்து கொண்டு தேர்வானார்.
பைரவா படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவரது கேரக்டரை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள். அவருக்கு ஏற்படும் ஒரு பாதிப்பை தட்டிக்கேட்கத்தான் விஜய் விஸ்வரூபம் எடுப்பார் என்கிறது பட யூனிட். படத்தில் அவர் விஜய்யின் தங்கை அல்லது கீர்த்தி சுரேசின் தோழியாக நடித்திருக்கலாம் என்ற தெரிகிறது. தமிழ் நாட்டில் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே அபர்ணா வினோத்தின் ஆசை. அதனால்தான் இடையில் வந்த சில வாய்ப்புகளையும் தவிர்த்து பைரவா வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.