Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பைரவா பாடல் வெளியீட்டு விழா ரத்து ஏன்? தயாரிப்பாளர் அறிக்கை

20 டிச, 2016 - 11:43 IST
எழுத்தின் அளவு:
Why-Bairavaa-Audio-launch-cancelled---Vijaya-productions-reply

விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமய்யா நடித்துள்ள படம் பைரவா. அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்கி உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன் தயாரித்துள்ளது. படம் பொங்கல் பண்டிகையன்று வெளியாகிறது. அதற்கு முன்னதாக பைரவா படத்தின் பாடல்களை பிரமாண்ட விழா நடத்தி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்தது. இப்போது விழா ரத்து செய்யப்பட்டுவிட்டது. இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் பி.வெங்கட்ராம ரெட்டி, பி.பாரதிரெட்டி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


பைரவா இசை வெளியீட்டு விழாவை படு விமரிசையாக நடத்த எண்ணியிருந்தோம். இந்நிலையில் தமிழக முதல்வர் அவர்களின் எதிர்பாராத இழப்பால் இவ்விழா கைவிடப்பட்டுள்ளது. காரணம், எங்களுடைய விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நம் நாடு திரைப்படத்தில் அவர் நடித்தார். அதோடு மட்டுமல்லாமல், எங்களுடைய குடும்பத்தில் ஒருவராக அவர்களை மதித்து வந்தோம். அவருடைய இழப்பின் காரணமாக பைரவா இசைவெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டோம்.


அதோடு, இளைய தளபதி விஜய் அவர்களும் மேற்கண்ட காரணத்திற்காக இசைவெளியீட்டை பிரமாண்ட விழாவாக நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார். அதனால், எளிமையான முறையில் வரும் 23 ஆம் தேதி பாடல்களை உலகெங்கும் நேரடியாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்.. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in