டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் சிவா டூ வங்கவீட்டி திரைப்படம், அண்மையில் தணிக்கைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். 1980களில் விஜயவாடாவில் நடந்த சாதிய அரசியலை மையப்படுத்தி வங்கவீட்டி திரைப்படம் உருவாகியுள்ளது. விஜயவாடாவின் அரசியல் பிரமுகரான வங்கவீட்டி ராணாவை இப்படத்தில் தவறாக சித்தரித்துள்ளதாக ராணாவின் மகன் வங்கவீட்டி ராதா இப்படத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். பின்னர் வழக்கு சுமூகமாக தீர்க்கப்பட்டது. கடந்த மாதம் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விஜயவாடாவில் நடைபெற்றது. தசரி கிரண் குமார், ராமதூத கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். டிசம்பர் 23ல் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் சந்தீப், வம்சி, நையினா கங்குலி மற்றும் பலர் நடித்துள்ளனர்.