ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போது கௌதம் ராமச்சந்திரன் என்பவரது இயக்கத்தில் நேரடி தமிழ்ப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் மலையாள இளம் முன்னணி நடிகரான நிவின்பாலி.. இது ஏற்கனவே கன்னடத்தில் வெளியான 'உள்ளிடவரு கண்டந்தே' என்கிற படத்தின் ரீமேக் தான். நிவின்பாலிக்கு ஜோடியாக ஷ்ரதா ஸ்ரீநாத் என்பவர் நடிகிறார். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் 'சதுரங்க வேட்டை' ஹீரோ 'நட்டி' நட்ராஜ் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 'கள்ளப்படம்' லட்சுமி பிரியா நடிக்கிறார்.
இந்தப்படத்தில் ஒரு நடிகராக நடித்தாலும், ஒரு சமயம் சில காட்சிகளை படமாக்குவதற்காக கேமராமேனாகவும் மாறி யூனிட்டையே வியப்பில் ஆழ்த்தினாராம் நட்டி.. திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி பின்னனியில் உருவாகும் இந்தப்படத்திற்கு இன்னும் பெயர்வைக்கப்படவில்லை. பழைய ஹிட் படத்தின் டைட்டில் ஒன்றை வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.. இந்த டைட்டிலை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்துடன் நட்டியே பேச்சுவாரத்தையில் இறங்கியுள்ளாராம்.. தங்கள் படத்தின் மீது நட்டி இவ்வளவு உரிமை எடுத்துக்கொண்டு வேலைகளை கவனித்து வருவது இயக்குனர் கௌதம் ராமச்சந்திரனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறதாம்.