'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மஞ்சப்பை ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் கடம்பன். கேத்ரின் தெரசா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் வில்லனாக நடித்துள்ளார். யானைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் பழங்குடி இனத்தவராக நடித்துள்ள ஆர்யா, கிட்டத்தட்ட 90 கிலோ வெயிட் போட்டு நடித்துள்ளார். குறிப்பாக, நூற்றுக்கணக்கான யானைகளுக்கு மத்தியில் அவர் சண்டை காட்சியில் நடித்திருப்பதாகவும் கூறப் படுகிறது.
தற்போது கடம்பன் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், பொங்கலுக்கு அப்படம் வெளிவருவதற்கான சூழ்நிலைகள் இல்லை. என்றாலும், நேற்று தனது டுவிட்டரில், கடம்பன் படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறியுள்ளார் ஆர்யா. அதேசமயம் ஜஸ்ட் பார் பன் -என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆக, இதை ஆர்யா ஒரு ஜாலிக்காக குறிப்பிட்டபோதும், பொங்கல் பட பரபரப்பில் கடம்பனும் சேர்ந்துள்ளது.