விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
கன்னடத்தில் சிவராஜ்குமார் இயக்கத்தில் பி.வாசு இயக்கிய படம் சிவலிங்கா. அவருடன் வேதிகா, ஊர்வசி உள்பட பல நடித்த அந்த படம் சிலமாதங்களுக்கு முன்னர் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தை தற்போது தமிழில் ராகவா லாரன்சை நாயகனாக வைத்து ரீமேக் செய்திருக்கிறார் பி.வாசு. இதில் நாயகியாக இறுதிச்சுற்று ரித்திகா சிங் நடிக்க, சந்திரமுகியில் காமெடியனாக நடித்த வடிவேலுவும் இந்த படத்தில் நடித்துள்ளார்.
மேலும், இந்த படமும் சந்திரமுகி பாணியில் ஒரு மிரட்டலான ஹாரர் கதையில்தான் உருவாகியிருக்கிறது. அதோடு, சந்திரமுகியில் ஜோதிகா நடித்தது போன்ற ஒரு லீடு ரோலில் இதில் ரித்திகா சிங் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து முடிந்து விட்ட நிலையில், சென்னையில் டப்பிங் பணிகளை தொடங்கி விட்டார் பி.வாசு. பொங்கலுக்கு சிவலிங்கா திரைக்கு வருவது உறுதியாகி விட்டதால் தற்போது லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்ட முக்கிய கலைஞர்கள் டப்பிங் பேசி வருகிறார்கள்.