ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எம்ஜிஆருடன் ஜோடி சேர்ந்த நடிகைகளில் சரோஜாதேவி, ஜெயலலிதா, லதா, மஞ்சுளா உள்பட சில நடிகைகள் பெரிய அளவில் புகழ் பெற்றவர்கள். இவர்களில் சரோஜாதேவி நீண்ட காலத்திற்கு பிறகு மறுபடியும் சினிமாவில் பிரவேசித்தார். விஜய் நடித்த ஒன்ஸ்மோர் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகும் ஓரிரு படங்களில் நடித்தார். அதேபோல் லதாவும் சில படங்களில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்தபடி வரவேற்பு கிடைக்காததால் அவரை அதிகமான படங்களில் பார்க்க முடியவில்லை.
இந்த நிலையில், தற்போது நாகேஷ் திரையரங்கம் என்ற படத்தில் ஒரு டாக்டர் வேடத்தில் நடித்து வருகிறார் லதா. கதையின் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளின்போது மருத்துவமனை காட்சிகள் வருகிறதாம். அதனால் லதா சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களின் மனதில் பதிந்து விடும் வகையில் படமாகி வருகிறதாம். மேலும், இதையடுத்து அதிகமான படங்களில் நடிக்க விரும்பும் லதா, அம்மா, பாட்டி வேடங்களில் நடிப்பதற்கும் தான் தயாராக இருப்பதாக தன்னை சந்திக்கும் சினிமாத்துறையினரிடம் கூறி வருகிறார்.