'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் நடிகை தீபீகா படுகோனே, சமீபத்தில், அபுதாபிக்கு சென்ற போது, அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது, அதே ஓட்டலில் தங்கியிருந்த ஒருவர், தீபிகாவை நேரடியாக பார்த்த போதும், கண்டு கொள்ளாமல் சென்று விட்டாராம். நம்மை தெரியாத ஒருவர், அபுதாபியில் இருக்கிறாரா என, ஆச்சரியப்பட்ட தீபீகா, அந்த நபரை பின் தொடர்ந்து சென்று, நான் தான் நடிகை தீபீகா; என்னை உங்களுக்கு தெரியவில்லையா என, கேட்டுள்ளார்.
அவரோ, நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவன்; ஹிந்தி படங்கள் அவ்வளவாக பார்ப்பது இல்லை; சாரி என, கூறிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டாராம்; தீபீகாவால், இதை இன்னும் ஜீரணிக்கவே முடியவில்லையாம்.