Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷின் இயக்கத்தை புகழும் சாயாசிங்

14 டிச, 2016 - 12:20 IST
எழுத்தின் அளவு:
chaya-singh-made-a-great--complementary-talk-on-the-directorial-debut-of-dhansush

'திருடா திருடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் நடிகை சாயாசிங். இந்த படத்தை சுப்பிரமணியம் சிவா இயக்கினார் . 'திருடா திருடி' படத்தில் சாயாசிங் ஜோடியாக நடிகர் தனுஷ் நடித்து இருந்தார். அந்தப்படம் இருவருக்கு நல்ல வரவேற்பை தமிழ் சினிமாவில் கொடுத்தது. இப்படத்தில் இடம் பெற்ற 'மன்மதராசா...' பாடலில் இருவரின் நடனமும் எல்லோராலும் தற்போது வரை பேசப்படுகிறது. அதன்பின் சில படங்களில் நடித்த சாயாசிங் நீண்ட இடைவெளிக்கு பின் தனுஷ், இயக்கி, நடிக்கும் ‛பவர் பாண்டி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.


பவர் பாண்டி படத்தில் நடிக்கும் அனுபவம் பற்றியும், தனுஷின் இயக்கும் திறமை பற்றியும் புகழ்ந்துள்ளார் சாயாசிங். அதன்விபரம் வருமாறு... 'தனுஷ் இயக்கும் முதல் படமான பவர் பாண்டி படத்தில் என்னை பரிந்துரை செய்தவர் ‛திருடா திருடி' படத்தின் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா தான். தனுஷ், நடிகராக இருந்து இயக்குநரானவர் என்பதால் நடிகர்-நடிகைகளிடமிருந்து எப்படி நடிப்பை வாங்க வேண்டும் என்று அவருக்கு தெரியும். தனுஷ் சிறந்த நடிகர் என்பது அனைவரும் அறிந்தது, ஆனால் ஒரு இயக்குநராகவும் இவரின் திறமை மிகவும் சிறப்பாக இருக்கிறது. முதல்பட இயக்குநர் போல் அவர் இல்லை பல படங்களை இயக்கிய அனுபவம் போன்று அவரிடம் தெரிகிறது, ஒரு குழந்தை போல் உற்சாகமாக இருக்கிறார் தனுஷ்” என்று ஏகத்துக்கும் புகழ்ந்துள்ளார் சாயாசிங்.


'பவர்பாண்டி' படத்தில் தனுஷ், ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங் உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது . 'பவர் பாண்டி' படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in