ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் குண்டு ஆர்த்தி. ஒருகட்டத்தில் வடிவேலு போன்ற மெகா காமெடியன்களுடன் நடித்து வந்தார். அப்படி அவர் வடிவேலுவுடன் நடித்த பல படங்களின் காமெடி காட்சிகள் சூப்பர் ஹிட்டாகின. அதனால் தொடர்ந்து தான நடிக்கும் படங்களில் ஆர்த்திக்கு சான்ஸ் கொடுத்து வந்தார் வடிவேலு. ஆனால் வடிவேலு சில ஆண்டுகள் நடிப்பை விட்டு விலகியிருந்தபோது, ஆர்த்தியின் மார்க்கெட்டும் இறங்குமுகமானது.
இந்நிலையில், தற்போது கத்திச்சண்டை படத்தில் மீண்டும் காமெடியனாக கள றங்கியிருக்கும் வடிவேலு, தனது கூட்டணியில் குண்டு ஆர்த்தியும் இணைத் துள்ளார். இதையடுத்து இதுவரை ஆர்த்தியை கண்டுகொள்ளாத வேறு சில காமெடியன்களும் இப்போது அவருக்கு சான்ஸ் கொடுத்துள்ளனர். மேலும், மலையாளத்தில் சில படங்களில் கமிட்டாகியிருக்கும் ஆர்த்தி, வடிவேலுவுடன் தான் நடித்துள்ள கத்திச்சண்டை பொங்கலுக்கு ரிலீசான பிறகு இன்னும் பல படங்கள் தனக்கு புக்காகும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்.