ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பறந்து செல்ல வா படத்தை பார்ப்பதன் மூலம், 120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றி பார்த்த அனுபவம் கிடைக்கும், என, நாசரின் மகன், நடிகர் லுாத்புதின் பாஷா கூறியுள்ளார்.நாசர் மகன், லுாத்புதின் பாஷா நடிகராக அறிமுகமாகும், நேற்று முன்தினம் பறந்து செல்ல வா படம் வெளியானது. படத்தில், சதிஷ், கருணாகரன், ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், நரேல்கேங் உட்பட, பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள், சிங்கப்பூரில் படமாக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து, லுாத்புதின் கூறுகையில், இதுவரை பார்க்காத சிங்கப்பூரை, படத்தில் காணலாம். 120 ரூபாயில், சிங்கப்பூரை சுற்றி பார்த்த அனுபவம் கிடைக்கும். இதில், ரஜினியின், நம்ம ஊர் சிங்காரி என்ற பாடல், அப்படியே படமாக்கப்பட்டு உள்ளது, என்றார்.
நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், லுாத்புதீன் பாஷாவுக்கு, இது முதல் படம் என்பதால், மிக பதற்றத்துடன் இருந்தார். நான் அவரோடு, நட்புடன் பழகிய பின், சிறப்பாக நடித்தார், என்றார்.