Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கும்கி பிரமாண்டமான காதல் படம் - பிரபு சாலமன்!

14 அக், 2011 - 11:26 IST
எழுத்தின் அளவு:

 மைனா படத்தை அடுத்து பிரபு சாலமன் டைரக்ட் செய்யும் படம் கும்கி. இந்த படத்தில், நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.யுடிவி திருப்பதி பிரதர்ஸ் சார்பில் ரோணிஸ்குருவாலா என்.சுபாஷ்சந்திரபோஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். கும்கி படத்தை பற்றி டைரக்டர் பிரபு சாலமன் கூறும் போது, காட்டுக்குள் இருந்து ஊர் பக்கம் வருகிற ‌யானைகளை விரட்டி அடிக்க, மனிதனால் பழக்கபட்ட யானைக்கு கும்கி என்று பெயர். அந்த யானைகளின் வாழ்வியல் பின்னணியில் ஒரு காதல் கதையை சொல்லியிருக்கிறேன். இது  ஒரு பிரமாண்டமான காதல் படமாக இருக்கும்.வனத்தையும், மனதையும் ஒரு சேர தூண்டில் போட்டு தூக்கும். யானைகள் பொதுவாக 11 அடி உயரம் இருக்கும். தந்தம் ஐந்தரை அடி இருக்கும். அதற்கு பக்கத்தில் நின்றால், ஒருவர் கம்பீரமாக தெரியவேண்டும்.அப்படி தெரிகிறார் விக்ரம். அவர்தான் யானையை குளிப்பாட்டுகிறார்.அது தின்பதற்கு மட்டை போடுகிறார். செல்லம் கொஞ்சுகிறார்.அவரை, யானை தும்பிக்கையில் தூக்கிக்கொண்டு போகிறது.படப்பிடிப்பு முடிந்தால், அந்த யானையை அன்பாக அதட்டி லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கிற வரை எல்லாமே விக்ரம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்றார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

suganya - madurai,இந்தியா
15 அக், 2011 - 20:40 Report Abuse
 suganya mina is super movie wish u all the best prabhu
Rate this:
விக்னேஷ் - Tiruvannamalai,இந்தியா
15 அக், 2011 - 08:15 Report Abuse
 விக்னேஷ் யானையா காட்னா பிரமாண்டமான படமா டா... மைனா குத்து மதிப்பா ஓடிருச்சு! இந்த அட்டு ஃபிளாப் ஆகப்போவுது பாருடி!!!
Rate this:
வெங்கடேஷ் கோவிந்தராஜ் - Kongalapuram, Sivakasi.,இந்தியா
14 அக், 2011 - 19:14 Report Abuse
 வெங்கடேஷ் கோவிந்தராஜ் ஹாய் பிரபு சாலமன் சார் உங்க படங்கள் எல்லாமே நன் விரும்பி பார்ப்பேன். மிண்டும் ஒரு நல்ல படம் பார்க்க காத்து கொண்டிருகிறேன்.
Rate this:
ஜெயக்குமார் - Srivi,இந்தியா
14 அக், 2011 - 17:19 Report Abuse
 ஜெயக்குமார் எல்லாம் சரி, யானை சாணிய அள்ளுறானா அவன்?????
Rate this:
punita - Le Havre,பிரான்ஸ்
14 அக், 2011 - 17:14 Report Abuse
 punita To Mr.Prabu Solomon, Wish you great success in your new venture.May God bless your effort in your project. With all Good wishes
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in