இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மையா. நடிகருமான இவர், கமல் பத்து வேடங்களில் நடித்து வெளியான தசாவதாரம் படத்தின் இசையமைப்பாளர் இவர் தான். ஹிமேஷ் தனது 21வது வயதிலேயே கோமல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்வயம் என்ற மகன் உள்ளார். 22 ஆண்டுகாலம் இவர்களது திருமண வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் இப்போது புயல் வீச தொடங்கியுள்ளது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து உள்ளனர். இருவரையும் சமாதானம் செய்ய குடும்பத்தார் எவ்வளவோ முயற்சித்தும் அதற்கு பலன் இல்லை. இதையடுத்து இருவரும் விவாகரத்து கேட்டு மும்பை பாந்த்ரா கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரும் விவாகரத்து கேட்டு பிரிவதற்கான காரணம் தெரியவில்லை.