தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கமலுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் என தொடர்ச்சியாக நடித்தவர் ஆண்ட்ரியா. அதன்பிறகு அவர் கமிட்டான தரமணி உள்ளிட்ட சில படங்கள் தேங்கியுள்ளன. இந்த நேரத்தில்தான் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் வடசென்னை படத்தில் ஸ்லம் ஏரியா பெண்ணாக நடிக்க ஒப்பந்தமானார் ஆண்ட்ரியா. கதைப்படி அவருக்கு விலைமாது வேடம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், மாடர்ன் பெண்ணான ஆண்ட்ரியா அந்த படத்துக்காக டோட்டலாக தனது கெட்டப்பை மாற்றி சென்னை தமிழ் பேசி நடித்துக்கொண்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படத்திலும் கமிட்டாகியுள்ளார் ஆண்ட்ரியா. இந்த படத்தில் முதன்மை நாயகியாக ராகுல்ப்ரீத்சிங் நடிக்கும் நிலையில், ஒரு வித்தியாசமான கேரக்டரில் ஆண்ட்ரிய நடிக்கிறாராம். ஒன்சைடாக விஷாலை லவ் பண்ணும் ஒரு வேடத்தில் ஆண்ட்ரியா நடிப்பதாக கூறப்படும் நிலையில், ஸ்டைலிஷான ஒரு கெட்டப்பில் கவர்ச்சிகரமாக அவர் நடிக்கயிருப்பதாகவும் சொல்கிறார்கள்.