'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அழகிய தமிழ் மகனைத் தொடர்ந்து பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பைரவா. பரதனுடன் இணைந்த முதல் படத்தைப்போலவே இந்த படத்திலும் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் எம்ஜிஆர் நடித்தது போன்று சிட்டி, வில்லேஜ் என இரண்டுவிதமான வேடங்களில் நடித்துள்ளாராம். திட்டமிட்டபடியே இந்த படத்தின் படப்பிடிப்பை மின்னல் வேகத்தில் முடித்து விட்ட பரதன், தற்போது போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகளில் பிசியாகி விட்டார்.
மேலும், இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ள விஜய், மாறுபட்ட தோற்றத்தில் தன்னை வெளிப்படுத்தியிருப்பது போன்று டப்பிங்கிலும் கிராமத்து ரோலில் எளிமையாகவும், நகரத்து ரோலில் சற்று கம்பீரமாகவும் வித்தியாசப்படுத்தி பேசியிருக்கிறாராம். பொங்கலுக்கு பைரவா திரைக்கு வரும் நிலையில், டிசம்பர் 17-ந்தேதி இசை வெளியீடு நடக்கிறது. முன்னதாக, தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் ரிலாக்ஸ் பண்ணுவதற்காக குடும்பத்துடன் ஏதாவது ஒரு வெளிநாட்டிற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள விஜய், இந்த முறை பைரவா பட வேலைகளை முடித்ததும் லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார்.