பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 66வது பிறந்த நாள் வருகிற 12ந் தேதி வருகிறது. இதனை அவரது ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டிருந்தாலும், முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து கொண்டாட வேண்டாம் என்ற அறிக்கை வெளிவரும். முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் நிலையில் தன் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று கமல் அறிவுறுத்தியது நினைவிருக்கலாம். அதையே ரஜினியும் பின்பற்றுவார் என்றே தெரிகிறது.
ஆனால் ராஜ் டி.வி, ரஜினியின் பிறந்த நாளை அவரது திரைப்படங்களை திரையிட்டு கொண்டாடுகிறது. ரஜினியின் பெரும்பாலான படங்களின் தொலைக்காட்சி உரிமம் ராஜ் டி.வியிடம் தான் உள்ளது. அதனால் சூப்பர் ஸ்டார் கொண்டாட்டம் என்ற பெயரில் டிசம்பர் மாதம் முழுவதும் தினமும் ஒரு ரஜினி படத்தை ஒளிபரப்புகிறது. இதில் ரஜினியின் முக்கியமான 30 படங்கள் ஒளிபரப்பாகிறது. ரஜினி ரசிகர்களுக்கு இந்த படங்கள் விருந்தாக அமையும்.