'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
மலையாளத்திலிருந்து சென்னை 28 இரண்டாம் பாகத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் சனா அல்தாப். கராத்தே, பரதநாட்டியம், நடிப்பு, என எல்லாவற்றையும் முறையாக கற்று நடிகை ஆனவர் சானா. தமிழில் நம்பிக்கையோடு கால் பதிக்கிறார். "சென்னை 28 படப்பிடிப்பில் வெங்கட்பிரபு எனக்காக நிறைய விட்டுக் கொடுத்தார்" என்கிறார் சனா. அவர் மேலும் கூறியதாவது:
மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் நடிக்கும் ஆசை இருந்தாலும் அதற்கு சில ஆண்டுகள் ஆகும் என்று நினைத்திருந்தேன். திடீரென்று இந்த வாய்ப்பு கிடைத்தது. இதில் நான் ஜெய் ஜோடியாக நடிக்கிறேன். என் கேரக்டர் பெயர் அனுராதா. சுட்டியான பெண் கேரக்டர்.