இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், வழக்கறிஞர் உள்ளிட்ட பன்முக திறமை கொண்டவரான சோ ராமசாமி, சென்னையில் காலமானார். அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி.... ‛‛1978-லிருந்து எனக்கு நல்ல நண்பர் சோ. சென்னையில் இருந்தால் கண்டிப்பாக வாரத்திற்கு ஒருமுறையாவது அவரை சந்திப்பேன். பத்திரிகை துறையில் பெரிய ஜாம்பவான், அவர் பொய் சொல்லி நான் கேள்விப்பட்டது கிடையாது. அவரது நட்பு வட்டாரம் தமிழகம் மட்டுமல்ல டில்லி வரை வளர்ந்து கிடந்தது. மொராஜி தேசாய், வாஜ்பாயிலிருந்து இப்போது மோடி வரை அவருக்கு நன்கு பழக்கமானவர்கள். மிகப்பெரிய மனிதர், அவரது இழப்பு சாதாரணமானது அல்ல''.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.