Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலா இயக்கத்தில் சிம்பு?

07 டிச, 2016 - 09:42 IST
எழுத்தின் அளவு:
is-simbu-and--director-bala-together-in-a-movie-?

தாரைத்தப்பட்டை படத்தை அடுத்து குற்றப்பரம்பரை சாயலில் ஒரு கதையை இயக்க திட்டமிட்டார் டைரக்டர் பாலா. அந்த படத்தில் விஷால், ஆர்யா, ராணா, அதர்வா போன்ற நடிகர்கள் நடிக்கயிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் குற்றப்பரம்பரை கதையை இயக்கப்போவதாக நீண்டகாலமாக சொல்லி வந்த பாரதிராஜா, தனது கதையைத்தான் பாலா இயக்குகிறார் என்று எதிர்ப்பு தெரிவிக்க, அதற்கு பாலா மறுப்பு தெரிவித்தபோதும் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. பின்னர் கோலிவுட்டில் ஒரு களோபரம் நடந்து ஓய்ந்தது.


அதையடுத்து, அந்த கதையை ஓரங்கட்டி விட்டு, சாட்டை படத்தில் நடித்த யுவனை நாயகனாக வைத்து பிராமணர் சம்பந்தப்பட்ட ஒரு கதையை பாலா இயக்கயிருப்பதாகவும், அதற்கான கதை வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகத்தான் கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், இப்போது சிம்புவை நாயகனாக வைத்து பாலா தனது அடுத்த படத்தை இயக்குவதாக இன்னொரு செய்தி கோலிவுட்டில் பரவிக்கொண்டிருக்கிறது. அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் வெளியானதும் இந்த படவேலைகள் தொடங்குவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது விரைவில் தெரிந்து விடும்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in