வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அது இது எது நிகழ்ச்சியில் பங்கேற்று வருபவர் நாஞ்சில் விஜயன். அதில், நூற்றுக்கும் மேற்பட்ட எபிசோடிகளில் நடித்திருக்கும் அவர், 50 எபிசோடுகளுக்கு மேல் பெண் வேடத்தில்தான் நடித்துள்ளார். அதற்கு நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் அவருக்கு பெண் வேடங்களே அதிகமாக கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் இப்போது அவர் அது இது எது நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு நடிப்ப தைப்பார்த்து அழகுராஜா என்ற இயக்குனர் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்ற படத்திலும் அவரை பெண் வேடத்தில் நடிக்க வைத்துள்ளாராம். புதுமுகங்கள் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தில் லொள்ளு மனோகருக்கு ஜோடியாக நாஞ்சில் விஜயன் நடித்திருக்கிறார். கதைப்படி வில்லன் கோஷ்டியில் படம் முழுக்க காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம் அவர்.