'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
ஏ.எல்.விஜய் இயக்கிய தேவி படத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் நாயகியாக நடித்தவர் தமன்னா. அதையடுத்து பாகுபலி-2, கத்திச்சண்டை, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய படங்களில் நடித் துக்கொண்டிருக்கிறார். இதில் கத்திச்சண்டையில் வழக்கமான கமர்சியல் நாயகியாக நடித்துள்ள தமன்னா, பாகுபலி-2வில் முதல் பாகத்தில் நடித்த அதே அவந்திகா வேடத்தில் மீண்டும் புரட்சி பெண்ணாக நடிப்பவர், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் 60 வயது அஸ்வின் தாத்தாவாக சிம்பு நடித்துள்ள வேடத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படங்களில் தான் வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுத்திருப்பதாகவும் பெருமையாக கூறி வருகிறார் தமன்னா.
இந்த நேரத்தில் நான் அவனில்லை-2 படத்தை அடுத்து அரவிந்த்சாமியை நாயகனாக வைத்து டைரக்டர் செல்வா இயக்கும் படத்திலும் தமன்னா நடிக்கிறாராம். நான் அவனில்லை பாணியில் இந்த படத்திலும் 5 நாயகிகள் நடிக்கிறார்கள். அதில் முக்கிய லீடாக தமன்னா நடிக்கிறாராம். மேலும், இனியா அதிரடி வில்லியாக இந்த படத்தில் நடிக்கிறார். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க உள்ள இந்த படத்தில் நடிக்க இன்னும் 3 நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.