தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினியின், 2.0 படத்தில், அக் ஷய் குமாரின் பாத்திரம் குறித்த தகவலை, அவரது மனைவி கசிய விட்டதால், இயக்குனர், ஷங்கர் உள்ளிட்ட படக் குழுவினர், அதிருப்தி அடைந்துள்ளனர்.ரஜினி, அக் ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்க, ஷங்கர் இயக்கும், 2.0 படத்தை, 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில், லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. ஹாலிவுட் பாணியில், 3டி தொழில்நுட்பத்தில் படம் தயாராகி வருகிறது. படத்தின் கதை உள்ளிட்ட, எந்த விஷயமும் வெளியே போகாதபடி, படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஆனாலும், 2.0 படத்தின் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பரவி விட்டன. இந்நிலையில், அக் ஷய் குமார் பாத்திரம் குறித்து, அவரது மனைவி டுவிங்கிள் கண்ணா பேட்டி ஒன்றில், என் கணவர், 2.0 படத்தில் ரிச்சர்ட்ஸ் என்ற மருத்துவராக நடிக்கிறார். ஆராய்ச்சியின் போது தவறு நடந்து, அதில் அவர், பறவை குணாதிசயங்களை கொண்ட மனிதராக மாறி விடுவார் என, உளறியுள்ளார். அக் ஷய்குமாரின் படம் மட்டுமே கசிந்த நிலையில், அவரது பாத்திரம் குறித்தும் வெளியானதால், ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர், அதிருப்தி அடைந்துள்ளனர்.