ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அண்மைக்காலமாக யூடியூபில் வெளியிடப்படும் வீடியோக்களை எத்தனை பேர் பார்த்தார்கள் என்பதை சாதனையாக தம்பட்டம் அடித்து வருகின்றனர் சினிமாக்காரர்கள். டீசர், டிரெய்லரை பல லட்சம் பேர் பார்த்ததாக சொல்லப்படுகிற படம் தியேட்டருக்கு வரும்போது மக்கள் அந்தப் படத்தை பார்க்க ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கு சமீபத்தில் வெளியான பல படங்களை உதாரணமாக சொல்லலாம். இந்நிலையில் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணிபுரிந்த ஸ்ரீகண்டன் என்பவர் 'தப்பு தண்டா' என்ற படத்தை இயக்கி வருகிறார். புதுமுகங்கள் சத்யா, சுவேதா கய் நடிக்கும் இந்தப் படத்துக்கு நரேன் பாலகுமார் என்ற புதியவர் இசை அமைத்திருக்கிறார். இவர் இசை அமைப்பில் கானா வினோத் பாடிய 'டூப்ளிக்கா டோமாரி' என்று துவங்கும் பாடல் யூடியூபில் வெளியானது. இப்பாடலை பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளதாக சொல்கிறார்கள். புதுமுகங்கள் நடித்த, புதிய இசையமைப்பாளர் இசையமைத்த பாடலை இத்தனை பேர் பார்த்திருப்பது ஒருபக்கம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும் மற்றொருபுறம் இவ்வளவு ஹிட்ஸ் என்பது கொஞ்சம் டவுட் தான் என்கிறார்கள்.