ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் வெளியான பட்டதாரி படத்தில் நாயகியாக நடித்தவர் அதிதி. தமிழ்நாடு, கர்நாடகத்தில் வெளியான இந்த படம் டிசம்பர் 9-ந்தேதி கேரளாவில் 60 சென்டர்களில் வெளியாகிறது. அதனால் பட்டதாரி படம் தமிழகத்தில் வெளியான பிறகு சில நாட்கள் சென்னையில் அப்பட நாயகன் அபி சரவணன், இன் னொரு நாயகி ராசிகா ஆகியோருடன் இணைந்து ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர், தற்போது அவர்களுடன் கேரளா சென்று ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், பட்டதாரி படம் ரிலீசானதுமே அமீர் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கயிருக்கும் சந்தனதேவன் படத்தில் கமிட்டாகியுள்ளார் அதிதி.
இதுபற்றி அவர் கூறும்போது, நான் ரசித்த சில நடிகர்களில் ஆர்யாவும் ஒருவர். அவருடன் எனக்கு இரண்டாவது பட வாய்ப்பு கிடைத்திருப்பது சந்தோசமாக உள்ளது. அதனால் தமிழ் சினிமா மீது எனக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது. கூடிய சீக்கிரமே முன்னணி நடிகையாகி விடுவேன் என்று நினைக்கிறேன் என்று கூறும் அதிதி, சந்தன தேவன் படத்தில் என்னை ஒப்பந்தம் செய்யும்போது 6 மாதம் அக்ரிமென்ட் போட்டுள்ளனர். அதற்குள் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி விடுவதாக சொல்லியிருக்கிறார்கள். இந்த செய்தி வெளியானதை அடுத்து மேலும் சில கம்பெனிகள் என்னை தொடர்பு கொண்டு வருகின்றன. அதனால் எனக்குப்பொருத்தமான, பிடித்தமான கதைகளாக செலக்ட் பண்ணி வருகிறேன் என்கிறார் அதிதி.