தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மந்திரவாதியின் பிடியில் சிக்கி இருப்பதாக, பாட்டி அளித்துள்ள புகாரில் உண்மை இல்லை; கணவருடன் சந்தோஷமாக வாழ்கிறேன், என, நடிகை பாபிலோனா போலீசில் விளக்கம் அளித்து உள்ளார்.
சினிமாவில், துள்ளல் இசை பாடல்களுக்கு நடனம் ஆடி வந்தவர், நடிகை பாபிலோனா.அவர், மந்திரவாதியின் பிடியில் சிக்கி தவிப்பதாக, அவரது பாட்டி கிருஷ்ணகுமாரி, நேற்று முன் தினம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.இந்நிலையில், நேற்று, நடிகை பாபிலோனா, கணவர் சுந்தர் மூலம், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த விளக்க மனு: என் பெயர் பாக்யலட்சுமி. சினிமாவில், பாபிலோனா என்ற பெயரில் நடித்து வருகிறேன். நான் மந்திரவாதியிடம் சிக்கி தவிப்பதாக, என் தாய் வழி பாட்டி, கிருஷ்ணகுமாரி, 80, என்பவர் புகார் அளித்ததாக அறிகிறேன். சிறு வயதில் இருந்து, என் பாட்டியுடன் வசித்து வந்தேன். எங்கள் உறவினர் மூலம் பழக்கமான, ஆரணியை சேர்ந்த சுந்தரை, 2015 முதல், காதலித்து வந்தேன்; இது, பாட்டிக்கு பிடிக்கவில்லை. சுந்தரிடம் இருந்து என்னை பிரிக்க, பல வழிகளில் முயற்சித்தார். என், பெரியம்மாவும், நடிகையுமான மாயா மற்றும் அவரது மகன் மூலமாகவும் கொடுமைப்படுத்தினார். இதனால், 2015, செப்., 9ல், வடபழனியில், உறவினர்கள் முன், கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டோம். இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு, நவ., 22ல், ஆண் குழந்தை பிறந்து உள்ளது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால், நேரில் வந்து விளக்கம் அளிக்க முடியவில்லை. இதனால், கணவரை அனுப்பி உள்ளேன். பாட்டியின் புகாரில், துளியளவும் உண்மை இல்லை. என் கணவர் மந்திரவாதி கிடையாது. அவர், உடற்பயிற்சி கூடங்களுக்கு உபகரணங்கள் ஏற்பாடு செய்யும் தொழில் செய்து வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.